சென்னை: நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், அதிகாலையில், கங்கா ஸ்நானம் செய்யும் முறை, மற்றும் நேரம் வெளியாகி உள்ளது.
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நாளை (12ந்தேதி – ஞாயிற்றுக்கிழமை) சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே குடும்பத்தில் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் நாள். தீபாவளிக்கு அனைவரும் புத்தாண்டை அணிந்து, வெடிவெடித்து பலவகையான பலகாரங்கள் செய்து, அதை இறைவனுக்கு படைத்து விட்டு உண்டு மகிழ்வர்.
சிவபெருமானுக்கு உரிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி திருநாள் அன்று ஒரு ஏழை எளிய மக்களுக்கு கூட எளிய முறையில் தீபாவளியை கொண்டாடி மகிழ்வர். பண்டிகைகளிலேயே மிக அதிகாலையில் கொண்டாட கூடிய பண்டிகையாக தீபாவளி பண்டிகை உள்ளது. இன்றைய நாளில் நாம் கங்கா ஸ்தானம் செய்யும் முறையும் தீபாவளி வழிபாட்டு முறையும் எப்படி செய்ய வேண்டும். எந்த நேரத்தில் செய்ய வேண்டும் என்பதை பற்றி தெரிந்துகொள்ளலாம்.
சிவபெருமானின் முழு அருளையும் நாம் பெறுவதற்கு கங்கா ஸ்தானம் செய்வது மிகவும் நல்லது. சிவபெருமானுக்கு உரிய நாளாகிய தீபாவளி திருநாளில் கங்கா ஸ்தானம் செய்வது நாம் எதிர்பார்க்காத எண்ணில் அடங்காத நன்மைகளை நமக்கு தேடித் தருகிறது.
தீபாவளி திருநாளில் கங்கா ஸ்தானம் செய்வதற்கு உரிய நேரம் அதிகாலை 3 மணியிலிருந்து 5 மணி வரை ஆகும் இதற்குள் நாம் கங்கா ஸ்தானம் செய்து சிவபெருமானை வழிபட்டு பூஜை செய்துவிட வேண்டும். அதாவது சூரிய உதயத்திற்கு முன்பாக நாம் அனைத்து பூஜைகளையும் செய்து முடித்து விட வேண்டும்
தீபாவளி பண்டிகை அன்று நாம் தலைக்கு வைக்கும் நல்லெண்ணெயில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். தலைக்கு வைத்து குளிக்கும் சீகற்க்காய் எனப்படும் அரப்பில் சரஸ்வதி தேவி வாசம் செய்கிறாள்.
மேலும் சுடு தண்ணீரில் கங்கா தேவியும், சந்தனத்தில் பூமாதேவியும் குங்குமத்தில் கௌரி மாதாவும், மலர்களில் யோகிகளும், புத்தாடைகளில் மகாவிஷ்ணுவும், இனிப்புகளில் அமிர்தமும், தீபாவளி திருநாளன்று நாம் விசேஷமாக தயாரிக்க கூடிய மருந்து லேக்கியதில் தன்வந்திரி பகவான் மற்றும் நாம் தீபாவளியன்று ஏற்றக்கூடிய தீபங்களில் பரமாத்மாவும், பண்டிகை என்று மகிழ்ச்சியாக நாம் வெடிக்கும் பட்டாசுகளில் ஜீவாத்மாவாகிய நாமும் வாசம் செய்கிறோம்.
இவ்வாறு தீபாவளி திருநாள் அன்று ஒவ்வொரு பொருட்களிலும் ஒவ்வொரு தெய்வங்கள் வாசம் செய்து நமக்கு வரங்களை தருகின்றனர் தீபாவளி திருநாள் அன்று ஏழை எளியவனும் சிவபெருமானின் முழு அருளை முழுவதுமாக பெற முடியும் என்பதை தீபாவளி பண்டிகையின் சிறப்பாகும்.
காலையில், நல்லெண்ணெய் சீயக்காய் தேய்த்து சுடு தண்ணீரில் குளித்துவிட்டு புத்தாடைகள் அணிந்து பின்பு பூஜை அறையில் சுவாமி படங்களுக்கு சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்து சுவாமிகளுக்கு மலர்கள் வைத்து பின்பு நாம் தீபாவளி பண்டிகைக்காக செய்து வைத்த பலகாரங்கள் அனைத்தையும் சுவாமிக்கு படையலாக படைக்க வேண்டும் நாம் செய்து வைத்த மருந்து லேகியத்தையும் படைக்க வேண்டும்.
அதனோடு நாம் ஜீவாத்மாவாக இருக்கக்கூடிய பட்டாசுகள் சிலவற்றையும் பூஜை அறையில் வைக்க வேண்டும் நாம் பட்டாசுகளை வைத்து தீபம் ஏற்றி வழிபடும் பொழுது ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றோடு ஒன்று சேர்ந்து இப்பிறவியின் புண்ணியத்தை நமக்கு தேடித் தரும் தேடித் தரும்.
பின்னர், தீபாரதனை காட்டி சுவாமியை மனதார நினைத்து வழிபட்டு விட்டு செய்து வைத்த தீபாவளி பலகாரங்களை குடும்பத்துடன் அமர்ந்து மகிழ்ச்சியாக சாப்பிட்டுவிட்டு, மன மகிழ்வுடன் பட்டாசுகளை வெடித்து மகிழுங்கள்.
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்…