சென்னை: ஆன்லைன் ரம்மி தடை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி பலர் உயிரிழந்த நிலையில், தமிழக அரசுஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை நிறைவேற்றியது. இதை எதிர்த்து ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், திறமை சார்ந்த ரம்மி, போக்கர்போன்ற விளையாட்டுகளை அதிர்ஷ்டத்துக்கான விளையாட்டு என்று கூறி தடை விதித்து தமிழக அரசு இயற்றிய சட்டப் பிரிவுகளை ரத்து செய்தும், அதிர்ஷ்டத்துக்கான ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்து தமிழக அரசு பிறப்பித்த சட்டம் செல்லும் என்றும் உத்தரவிட்டது. மேலும் ஆன்லைன் ரம்மி, போக்கர்ஆகியவற்றை விளையாடுவதற்கான வயது, நேரம் ஆகியவற்றை முறைப்படுத்தும் வகையில் அரசு புதிதாக விதிகளை உருவாக்கிக் கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது என தீர்ப்பில் கூறியுள்ளது.
இதுகுறித்து இன்று செய்தியளார்களிடம் பேசிய தமிழ்நாடு அரசு சட்ட அமைச்சர் ரகுபதி, ஆன்லைன் ரம்மி, போக்கருக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை உயர்நீதிமன்றம் ரத்து செய்யப்பட்டது பற்றி ஆலோசித்து மேல்முறையீடு செய்யப்படும் என கூறினார்.
தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் ரத்து! உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு