கழுகுமலை முருகன் கோயில் அல்லது கழுகாசலமூர்த்தி கோயில்,
தமிழ்நாட்டின், தூத்துக்குடி மாவட்டத்தில், கோவில்பட்டி – சங்கரன்கோவில் சாலையில் கழுகுமலையில் அமைந்த முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட குடைவரைக் கோயிலாகும். இம்முருகன் கோயில் கோவில்பட்டியிலிருந்து 22 கிமீ தொலைவில் உள்ளது. அருணகிரிநாதர் தமது திருப்புகழில் கழகுமலை முருகனைப் பாடியுள்ளார்.
அமைவு:
கழுகாசலமூர்த்தி கோவில் தெப்பக்குளம், கோயில் கூரைப் பகுதியில் கலைநயத்துடன் கூடிய சிற்பம், கழுகுமலை முருகன் கோயில் எதிரே எட்டயாபுரம் சமஸ்தான மன்னரின் சிறு அரண்மனை அமைந்துள்ளது.
முருகன் மேற்கு முகமாக வீற்றிருக்கும் மூன்று தலங்களில், இத்தலத்தை ராஜயோக தலம் என்று கச்சியப்பரால் போற்றப்பட்டுள்ளது.
இக்கோயில் மூலவரான முருகன் வள்ளி மற்றும் தெய்வானையுடன் அருள்பாளிக்கிறார்.
இம்முருகன் கோயில் அருகில் கழுகுமலை வேட்டுவன் கோயில் மற்றும் கழுகுமலை சமணர் படுகைகள் உள்ளது.
முக்கிய விழாக்கள்: தைப்பூசம் பங்குனி உத்திரம் வைகாசி விசாகம் கார்த்திகை தீபம்