சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜரானார்.
கடந்த திமுக ஆட்சியின்போது, தமிழக அரசின் முன்னாள் உயா்கல்வித்துறை தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்தாா். பின்னர், கடந்த 2016 ஆண்டு அமைக்கப்பட்ட அமைச்சரவையில் தொழிற்கல்வி உள்ளிட்ட உயர் கல்வி , மின்னணுவியல், அறிவியல் & தொழில் நுட்பவியல் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இவர் தனது ஆட்சி காலத்தில், வருமானத்துக்கு அதிகமாக ரூ.45.20 கோடி சொத்து சேர்த்ததாக திமுக அரசு புகார் அளித்தது. அதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புகாவல்துறை முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணைக்கு முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் நீதிமன்றத்தில் ஆஜரானார்.