பெர்லின்

தமது கன்னத்தில் முத்தமிட முயன்ற குரோஷியா அமைச்சரை ஜெர்மனியின் பெண் அமைச்சர் சாதுரியமாக தடுத்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சந்திப்பு ஜெர்மனியின் தலைநகரமான பெர்லின் நகரில், நடைபெற்றது. அதில் பல ஐரோப்பிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர். குரோஷியா நாட்டை சேர்ந்த 65 வயதான வெளியுறவு துறை அமைச்சர் கோர்டன் க்ரிலிக்-ராட்மேன் சந்திப்பில் பங்கு பெற்றார்.

இந்த சந்திப்பின் போது அனைத்து அமைச்சர்களும் ஒன்றாக இணைந்து புகைப்படம் எடுத்துக் கொள்ளும் சம்பிரதாய நிகழ்வு நடைபெற்றது.  அந்த நிகழ்வில் ஜெர்மனியின் வெளியுறவுத் துறை அமைச்சர் அன்னாலினா பேர்பாக் அந்த நிகழ்வில் கலந்து கொண்டு அனைவருடன் குழுவில் நின்றார்.

எதிர்பாராத விதமாக அன்னாலினா அருகில் நின்று கொண்டிருந்த ராட்மேன், அன்னாலினாவை கன்னத்தில் முத்தமிட முற்பட்டார். ஆனால் அன்னாலினா மென்மையாக ராட்மேனின் இந்த செய்கையைச் செய்கையை சாதுரியமாக தடுத்தார். குரோஷியா அமைச்சரின்  இந்த செயல் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.