டில்லி
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று இலங்கை செல்கிறார்.

இன்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இலங்கைக்குச் செல்கிறார்.
நிர்மலா சீதாராமன் இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் நூலகம், கலாச்சார மையம் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
அதைத் தவிரயாழ்ப்பாணம் மற்றும் திரிகோணமலையில் எஸ்.பி.ஐ. வங்கி கிளைகளை நிர்மலா சீதாராமன் திறந்து வைக்க உள்ளார்.
அமைச்சரின் பயணத்தின்போது இலங்கையில் உள்ள மத ஸ்தலங்களில் சூரிய மின்சக்தி உற்பத்திக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
Patrikai.com official YouTube Channel