டில்லி

த்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் கடந்த 2022 ஆம் ஆண்டில் சாலை விபத்து எண்ணிக்கையில் தமிழகம் முதலில் உள்ளதாக அறிவித்துள்ளது.

நாளுக்கு நாள் இந்தியாவில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துத் தனி நபர் வாகன பயன்பாடும் அதிகரித்து வருகிறது. .மேலும் வாகனங்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப விபத்துக்கள் ஏற்படுவதும் அதிகரித்து வருகிறது. சென்ற ஆண்டு மட்டும் 11 சதவீதம் முந்தைய ஆண்டை விட விபத்து எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், –

”கடந்த 2022-ம் ஆண்டில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 4,61,312 சாலை விபத்துகள் பதிவாகி 1,68,491 பேர் உயிரிழந்து 4,43,366 பேர் காயமடைந்துள்ளனர். முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது விபத்துகளின் எண்ணிக்கை 11.9 சதவீதமும், இறப்புகளின் எண்ணிக்கை 9.4 சதவீதமும், காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 15.3 சதவீதமும் அதிகரித்துள்ளது. இதற்குப் போக்குவரத்து விதி மீறல்களே பெரும்பாலும் காரணமாக அமைந்துள்ளது. 

தமிழகம் சாலை விபத்துகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரைத் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கடந்த 2022-ம் ஆண்டில் தமிழகத்தில் மொத்தம் 64,105 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன. ஏற்கனவே 2018-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சாலை விபத்துகளின் எண்ணிக்கையில் தமிழகம் தொடர்ந்து முதல் இடத்தில் இருந்துள்ளது. 

கடந்த 2022-ம் ஆண்டைப் பொறுத்தவரை இரண்டாவது இடத்தில் மத்தியப் பிரதேசமும், மூன்றாவது இடத்தில் கேரளாவும், நான்காவது இடத்தில் உத்தரப் பிரதேசமும் உள்ளன” 

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.