ஆந்திரா: தெலுங்கான மாநில சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என தெலுங்கு தேசம் கட்சி அறிவித்துள்ளது.
நவம்பர் 30 ஆம் தேதி தெலுங்கானா மாநிலத்திலும் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3ந்தேதி நடைபெறு கிறது. இதையொட்டி அங்கு தேர்தகளம் சூடுபிடித்துள்ளது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த , தெலுங்கு தேசம் கட்சியின் தெலங்கானா மாநில தலைவா் கசானி ஞானேஸ்வா். தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் தெலுங்குதேசம் போட்டியிடாது என்று தெரிவித்து உள்ளார்.
முன்னதாக ராஜமஹேந்திரவரம் மத்திய சிறையில் சிறையில் உள்ள சந்திரபாபு நாயுடுவை சந்தித்த பிறகு, இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.
கடந்த 2018-இல் நடைபெற்ற தெலங்கானா பேரவைத் தோதலில் 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற தெலுங்கு தேசம், 3.51 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு தேர்தலில் பங்குபெறாது என தெரிவித்து உள்ளது. அதே வேளையில், பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறத.
ஆந்திரத்தில் தெலுங்கு தேசத்துடன் கூட்டணியில் உள்ள நடிகா் பவன் கல்யாணின் ஜனசேனை கட்சி, தெலங்கானா பேரவைத் தோதலுக்காக 32 வேட்பாளா்களை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.