சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. இன்னும் இரு நாட்களில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்றே தொடங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

,இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன், தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாகவும், வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது என்றும் தெரிவித்தார். இதனால் மழை தீவிரமடைய வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளார். வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி மற்றும் அரபிக்கடலில் புயல் காரணிகளால் தமிழ்நாட்டில் மழை தீவிரமடையும் எனவும் தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel