சென்னை

கருக்கு குடிநீர் வழக்கும் ஏரிகள் நிரம்பி உள்ளதால் சென்னைக்குக் குடிநீர் பஞ்சம் வராது என அமைச்சர் கே என் நேரு கூறி  உள்ளார்.

கடந்த சில நாட்களாகச் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.  இதனால் நகருக்குக் குடிநீர் வழங்கும் அனைத்து ஏரிகளுக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது.   இந்த ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரியில் நீர் முழுக் கொள்ளளவை எட்ட இருந்ததால் ஏரியிலிருந்து கொச்ஸ்தலை ஆற்றில் நீர் திறந்து விடப்பட்டது.

இந்நிலையில் இன்று அமைச்சர் கே என் நேரு சென்னை பெரம்பூர் காமராஜர் நகரில் ரூ.2.90 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டிருந்த நகர்ப்புற சுகாதார நிலையத்தைத் திறந்து வைத்தார்.  இந்த திறப்பு விழாவின் போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அமைச்சர் கே என் நேரு,

“சென்னை மாநகராட்சி சார்பில் டெங்கு ஒழிப்புக்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.  தமிழக அரசு இனி வர உள்ள வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளத் தயாராக உள்ளது.  சென்னைக்குக் குடிநீர் வழங்கும் அனைத்து ஏரிகளும் நிரம்பி போதிய நீர் உள்ளதால் சென்னைக்குக் குடிநீர் பஞ்சம் வராது” 

என்று தெரிவித்துள்ளார்.