தஞ்சாவூர்; திமுக ஆட்சியில் மணல் கொள்ளை, கனிமவள கொள்ளை அதிக அளவில் நடந்து வருகிறது. தே.மு.தி.க என்றைக்கும் விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்கும் என்று கூறிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், காவிரி நதிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு நதிகளை இணைப்பது தான் என்று கூறியவர், ‘ கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று தஞ்சையில் நடைபெற்று வரும் உண்ணாவிரத போராட்டத்தில் பிரமேலதா விஜயகாந்த் கூறினார்.
காவிரியில், தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டிய தண்ணீரை கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு திறந்துவிடாமல் மறுத்து வருகிறது. காவிரியில் தமிழகத்துக்கு உரிய அளவிலான தண்ணீரை திறக்க வேண்டும் என காவிரி ஒழுங்காற்று மையம், காவிரி மேலாண்மை வாரியம், உச்சநீதிமன்றம் ஆகியவை உத்தரவிட்டு உள்ளது. ஆனாலும் கர்நாடக மாநில அரசு தண்ணீரை திறந்து விட முடியாது என முரண்டுபிடித்து வருகிறது.
இதை கண்டித்து, தேமுதிக சார்பில் இன்று தஞ்சையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது தஞ்சை பழைய பேருந்து நிலையம், அண்ணா சிலை அருகே நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் தேமுதிக பொருளாலர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டுள்ளார்.
இந்த உண்ணாவிரத மேடையில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், காவிரியில் தண்ணீர் திறந்துவிட மறுத்த கர்நாடக காங்கிரஸ் அரசு, மத்திய அரசை கண்டித்து, இன்று 5 இடங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. காவிரி நீதிநீர் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்க வேண்டும், இந்த விவகாரதில் நடைபெறுவது எல்லாமே அரசியல்தான்.
விவசாயிகள் நன்றாக இருந்தால் தான் நாடு நன்றாக இருக்கும். ஆனால் தமிழகத்தில் விவசாயிகளின் நிலைமை சொல்லிக் கொள்ளும்படி இல்லை. நாட்டிற்கே உணவு அளிப்பவர்கள் விவசாயிகள். ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை மாதம் வந்தாலே காவிரி நதிநீர் பிரச்சினை வந்து விடுகிறது. இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு நதிகளை இணைப்பதுதான் என்று கூறியவர், காவிரி டெல்டா மாவட்டங்களில் கால்வாய்கள் சரியாக தூர் வாரப்படாத காரணத்தால் பல பகுதிகளுக்கு தண்ணீர் சரியாக சென்று சேரவில்லை. தற்போது வினாடிக்கு 3000 கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தண்ணீர் கடைமடை வரை நிச்சயமாக செல்லாது. தடுப்பணைகள் கட்டப்படவில்லை என்று குற்றம் சாட்டினார்.
பெங்களூருவில் நேற்று பந்த் நடைபெற்றுள்ளது. இங்கு ஆட்சிகள்தான் மாறிக்கொண்டிருக்கிறதே தவிர எந்த காட்சிகளும் மாறவில்லை. டெல்டா காய்ந்து போய் பாலைவனமாக மாறிவிட்டது. இதற்கு உடனடியாக அரசுகள் தலையிட்டு தீர்வு காணவேண்டும். கர்நாடகாவில் உடனே எல்லோரும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக போராட்டம் நடத்துகிறார்கள். அந்த ஒற்றுமையை நிரூபித்தால்தான் நமது ஒற்றுமையை நிலைநாட்ட முடியும். முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி தமிழ்நாட்டிற்கு பெற்றுத் தர வேண்டிய உரிமையை பெற்றுத் தர நடவடிக்கை வேண்டும்
காவிரி பிரச்சினைக்கு காரணம் மத்திய மாநில அரசுகள் தான் என்று கூறியவர், கடந்த 1968-ம் ஆண்டிலிருந்தே காவிரி நதிநீர் பிரச்சனை நடந்து வருகிறது. கிட்டத்தட்ட 55 ஆண்டுகளாக காவிரி பிரச்சனை உள்ளது. ஆனால் இதுவரை நிரந்தர தீர்வு காணவில்லை. ஆண்ட கட்சிகள், ஆண்டு கொண்டிருக்கிற கட்சிகள் இதற்கான நிரந்தர தீர்வு கிடைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பது தான் உண்மை. இனிமேலாவது காவிரி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்க செய்ய வேண்டும்.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சோனியா காந்தியை சந்தித்து கர்நாடகாவை வலியுறுத்தி தமிழகத்திற்கு உரிய தண்ணீரை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் கூறியவர், அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பரும் கிடையாது. அதிமுக – பாஜக கூட்டணி பிரிந்து இரண்டு தினங்கள் தான் ஆகிருக்கு, இதனால் பொறுத்திருந்து பார்ப்போம் என்றார்.
அதிமுக பாஜக இரண்டு கட்சிகளுக்குள் பிரச்சனை இல்லை, இரண்டு தலைவர்களுக்கும் தான் பிரச்சனை. இதனால் தான் கூட்டணி முறிந்துள்ளது. எனவே, அதிமுக – பாஜக கூட்டணி முறிவு நிரந்தரமா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்றார்.
தென்மாவட்டங்களில் நடைபெற்று வரும் கனிமவள கொள்ளை குறித்த கேள்விக்கு, திமுக ஆட்சியில் மணல் கொள்ளை, கனிமவள கொள்ளை அதிக அளவில் நடந்து வருகிறது என்று குற்றம் சாட்டினார்.
நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களில் உள்ளது. அப்போது, யார் தலைமையில் கூட்டணி அமைகிறது என்பது குறித்து முடிவெடுக்கப்படும். கண்டிப்பாக தேமுதிக ஒரு நல்ல முடிவை எடுக்கும், உரிய நேரத்தில் தேமுதிகவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து கேப்டன் விஜயகாந்த் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து பேசிய பிரேமலதா விஜயகாந்த்,
காவிரி பிரச்சனை: வரும் 27ந்தேதி தேமுதிக உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு…