சென்னை

டுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாகத் தமிழகத்தின் தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்து இருந்தது.

தற்போது சென்னையின் அதிகாலை முதல் பல்வேறு இடங்களில் பரவலாகப் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் கிண்டி, வடபழனி, கோயம்பேடு, அண்ணாநகர் உள்ளிட்ட இடங்களிலும் மற்றும் வேளச்சேரி, வேப்பேரி, தாம்பரம், போரூர், அடையாறு, துரைப்பாக்கம், எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது.

தற்போது சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சி, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.