டெல்லி: நெல்லை – சென்னை வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி வரும் 24-ஆம் தேதி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். இந்த ரயில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நின்று செல்ல வேண்டும் என அம்மாவட்ட மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தமிழ்நாட்டில் இதுவரை இரண்டு வந்தேபாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், 3வது ரயிலாக நெல்லை சென்னை இடையே வந்தேபாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் சேவையை வரும் 24ந்தேதி பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.
ஏற்கனவே நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் மூன்றாவதாக சென்னை எழும்பூர் – திருநெல்வேலி வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில வருகின்ற ஞாயிற்றுக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைக்கிறார்.
இந்த ரயிலானது, நாள்தோறும் காலை 6 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு, , விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரத்தில் நின்று பிற்பகல் 1.50 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
அதேபோல், சென்னை எழும்பூரில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலிக்கு இரவு 10.40 மணிக்கு சென்றடையும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.
நெல்லையில் இருந்து சென்னைக்கு மொத்தம் 652 கி.மீ. தொலைவை வெறும் 7.50 மணிநேரத்தில் பயணிக்கு இந்த ரயில் செவ்வாய்க்கிழமை தவிர வாரத்தில் 6 நாள்கள் இயக்கப்படவுள்ளன.
இந்த ரயில், தூத்துக்குடி மாவட்டத்தில் எந்தவொரு ரயில் நிலையத்திலும் நிற்பது தொடர்பாக அறிவிக்கப்படவில்லை. அதனால், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்றுசெல்ல வேண்டும் என பொதுமக்கள், வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் முதல் வந்தே பாரத் ரயில் என்பது இதற்கு சிறப்பு பெற்றுள்ள இந்த ரயிலானது சென்னையில் புறப்பட்டு விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ரயில் நின்று செல்ல வசதி ஏற்படுத்தாதது, இம்மாவட்ட மக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஒரு நிறுத்தத்தை வழங்க வேண்டும் என்று அம்மாவட்ட மக்கள், வணிகர்கள் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி, வந்தே பாரத் ல் இயக்கப்படும் வழித்தடத்தில் தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய நகராக இருக்கும் கோவில்பட்டியில் இந்த ரயில் நின்று செல்ல வசதி ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.