சென்னை: தமிழ்நாடு அரசு வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் தொடர்பான இணையதளம் தொடங்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் தங்கள் விண்ணப்பத்தின் நிலையை இந்த இணையதளம் மூலம் தெரிந்துகொள்ள முடியும்.
தமிழ்நாட்டில், செப்டம்பர் 15ந்தேதி அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, கலைஞர் மகளிர் உரிமை தொகை என்ற பெயரில் தகுதிவாய்ந்த பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்திற்கு 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், 1.06 விண்ணப்பபதாரர்கள் மட்டுமே தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டது. இவர்களுக்கு அரசு அறிவித்தபடி, உரிமை தொகையானது அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு உள்ளது.
நிராகரிக்கப்பட்ட, 56.5 லட்சம் விண்ணப்பங்களுக்கான காரணம் என்ன என்பது குறித்த குறுஞ்செய்தியானது அந்தந்த குடும்ப தலைவிகளின் செல்போன் எண்ணிற்கு அனுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து, குறுஞ்செய்தி வராத மகளிர் தங்கள் பகுதியில் உள்ள இசேவை மையத்தில் 30 நாட்களுக்குள் மேல்முறை யீடு செய்யலாம் எனவும், இந்த விண்ணப்பங்கள் வருவாய் கோட்டாட்சியரிடத்தில் அனுப்பப்பட்டு பின்னர் அந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் என்றும் சிறப்பு செயலாக்கத்துறை அறிவித்துள்ளது. மேலும், மேல்முறையீடு செய்த விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள்மீது 30 நாட்களில் நடவடிக்கை எடுக்க்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் இணையவழி வாயிலாக மட்டுமே நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு புதிய இணையதளம் தொடங்கப்பட்டு உள்ளது. இதற்காக http://kmut.tn.gov.in என்ற இணையதளத்தைத் தொடங்கியுள்ளனர். இதில் பொதுமக்கள் தங்கள் விண்ணப்பத்தின் நிலையை அறியலாம். மேல்முறையீடு செய்துள்ள பொதுமக்கள் இணையதளத்தை ஓப்பன் செய்தில், அதில் தங்கள் ஆதார் எண்ணை பதிவிட்டால், அவர்கள் ஆதார் எண் இணைக்கப்பட்ட மொபைலுக்கு ஒடிபி வரும்., அதை பதிவு செய்வதன் மூலம் அவர்கள் தங்களது விண்ணப்பம் தொடர்பான நிலையை தெரிநிதுகொள்ள முடியும்.