டில்லி

நாளை முதல் நடக்க உள்ள நாடாளுமன்ற  கூட்டத்தொடரையொட்டி அனைத்துக் கட்சி கூட்டம் டில்லியில் நடைபெற்று வருகிறது.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை தொடங்கி 5 நாட்களுக்கு நடைபெறுகிறது.   நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி இதைச்  சிறப்புக் கூட்டத்தொடர் என்று கூறினார். ஆனால் மத்திய அரசு பிற்பாடு, இது வழக்கமான கூட்டத் தொடர்தான் என்று விளக்கம் அளித்தது.

நிகழ்ச்சி நிரலின்படி நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுக்கால பயணம் குறித்த சிறப்பு விவாதம் பிரதானமாக நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தொடரையொட்டி அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தை மத்திய அரசு தற்போது நடத்துகிறது.

அப்போது கூட்டத்தொடர் குறித்து விளக்கம் அளித்து, அவர்களின் கருத்துகள் அறியப்படும் என்று தெரிகிறது.

தற்போது டில்லியில் தொடங்கியுள்ள அனைத்து கட்சி நாடாளுமன்ற குழு தலைவர்கள் கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, அதிமுக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.