டில்லி
இந்தியாவில் ஒரே மாவட்டம் ஒரே தயாரிப்பு திட்டத்தை ஊக்குவிக்க வேண்டும் என மோடி கூறியதாக ஜி 20 செயலர் முத்தேஷ் பர்தேஷி தெரிவித்துள்ளார்.
இன்றும் நாளையும் டில்லியில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டில், 20 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். தவிரப் பிற நாடுகளின் முக்கிய பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனர்.
இன்று ஜி-20 சிறப்புச் செயலர் முக்தேஷ் பர்தேஷி,.
“இந்த ஜி-20 பயணத்தில் ஓர் அத்தியாவசிய பொருளாக, கலைப்பொருட்கள் அங்கம் வகிக்கின்றன. பிரதமர் மோடி நாட்டில், ஒரே மாவட்டம், ஒரே தயாரிப்பு என்ற திட்டம் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று கூறினார். இந்த ஊக்குவிப்பை ஜி-20 கூட்டங்கள் வழியே அவர்கள் பெற்றனர்
இது குறித்துக் கடந்த ஓராண்டாக கண்காட்சி மற்றும் விற்பனை நடந்தது. டில்லியில் உச்சி மாநாடு நடைபெறும் சூழலில், ஒவ்வொரு பகுதிக்கும், ஒவ்வொரு மாநிலத்திற்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இதில் நாட்டின் பல பகுதிகள் மற்றும் மாநிலங்கள் இதில் பங்கேற்றதை நீங்கள் பார்த்திருக்கலாம்.
ஒரே மாவட்டம் ஒரே தயாரிப்பு திட்டம் வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகத்துக்கு உட்பட்ட தொழில் ஊக்குவிப்பு மற்றும் உள்நாட்டு வர்த்தக துறையின் கீழ் தொடங்கப்பட்டுச் செயல்படுகிறது. இந்த திட்டம் நமது நாடும், மக்களும் சுயச்சார்புடன் திகழ வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்கு பார்வையைச் செயல்படுத்தும் நோக்கம் கொண்டது.
இந்த திட்டத்தினால் நாட்டின் அனைத்து மாவட்டங்களும் சம அளவிலான வளர்ச்சியைப் பெறும். கைத்தறி மற்றும் கைவினை பொருட்கள் உள்பட பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த நாடு முழுவதுமுள்ள பொருட்களும் இவற்றில் காட்சிப்படுத்தப்படும்.”
எனக் கூறி உள்ளார்.