டில்லி

ந்தியக் குடியரசுத் தலைவர் ஜி 20 மாநாட்டையொட்டி அளிக்கும் விருந்துக்கு கார்கே அழைக்கப்படாததற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இன்று மாலை ஜி-20 மாநாட்டுப் பிரதிநிதிகளுக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருந்து அளிக்கிறார்.  அதற்கு ஜி 20 பிரதிநிதிகள் மட்டுமின்றி மத்திய அமைச்சர்கள், முன்னாள் பிரதமர்கள், அனைத்து முதல்வர்கள் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அழைப்பிதழ் அனுப்பப்படவில்லை என்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.  காங்கிரஸ் கட்சி இது குறித்து அதிகாரப்பூர்வமாக கருத்து தெரிவிக்கவில்லை.

பெல்ஜியம் நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வரும் ராகுல்காந்தி,

”அவர்கள் எதிர்க்கட்சி தலைவரை அழைக்கக்கூடாது என்று  முடிவு செய்து விட்டனர். சில உண்மைகளை அது உணர்த்துகிறது. அவர்கள் இந்திய மக்கள்தொகையில் 60 சதவீத மக்களின் தலைவரை மதிக்கவில்லை. மக்கள் சிந்திக்க வேண்டிய விஷயமான இதற்குப் பின்னால் எந்த மாதிரி சிந்தனை இருக்கிறது என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும்”.

என்று கூறி உள்ளார்.