சென்னை
அனைத்து இந்தியா மற்றும் சர்வதேச போட்டிகளில் தமிழகம் பதக்கங்களை வெல்ல வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்

சென்னையில் தலைமைச் செயலகத்தில் நடந்த விளையாட்டுத்துறை உயர்நிலை ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் அவர் தமிழகம் சர்வதேச.மற்றும் இந்தியப் போட்டிகளில் பதக்கங்கள் வெல்ல வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில்,
”இந்திய அளவில் மட்டுமன்றி உலக அளவிலும் விளையாட்டுத் துறையில் தவிர்க்க முடியாத மாநிலமாகத் தமிழகம் உருவெடுத்து வருகிறது. இதை அடுத்தடுத்த கட்டங்களுக்கு எடுத்துச் செல்ல, நம்முடைய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை எண்ணற்ற அறிவிப்புகளை வெளியிட்டு, ஆக்கப்பூர்வமான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
அதன்படி வெளியான அறிவிப்புகள் மற்றும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் நிலை பற்றி ஆலோசிப்பதற்கான உயர்நிலை ஆய்வுக்கூட்டத்தை இன்று நடத்தினோம். இந்த கூட்டத்தில் அரசு உயர் அதிகாரிகள் – அலுவலர்கள் – பணியாளர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், ஒவ்வொரு அறிவிப்பையும் உரியக் காலத்தில் செய்து முடித்திடக் கேட்டுக்கொண்டோம். சர்வதேச மற்றும் இந்திய அளவிலான போட்டிகளில், நம் தமிழ்நாட்டு வீரர், வீராங்கனையர் ஆண்டிற்கு 100 பதக்கங்கள் வெல்வதை உறுதி செய்கிற வகையில் பணியாற்றுவோம் என வலியுறுத்தினோம்.
எனத் தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]