‘ஜவான்’ படம் செப்டம்பர் 7 ம் தேதி ரிலீசாக உள்ள நிலையில் திருப்பதியில் இன்று சாமி தரிசனம் செய்தார் ஷாருக்கான்.
மனைவி கவுரி கான் மகள் சுஹானா கான் என குடும்பத்துடன் சென்ற ஷாருக்கான் அதிகாலை சுப்ரபாத சேவையின் போது சாமி தரிசனம் செய்தார்.
ஷாருக்கான் குடும்பத்துடன் நயன்தாராவும் தனது குடும்பத்துடன் திருமலை சென்றது குறிப்பிடத்தக்கது.
இருந்தபோதும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் வேறு மதத்தைச் சேர்ந்த ஒருவர் சாமி தரிசனம் செய்தது எப்படி என்று கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
இதனையடுத்து திருப்பதி தேவஸ்தானத்தை தனது படத்தின் விளம்பரத்துக்காக ஷாருக்கான் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.