சென்னை

மிழகத்தில் காலியாக உள்ள மருத்துவப் பணியிடங்களை நிரப்ப விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா சுப்ரமணியன் கூறி உள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டச் சிறப்பு முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.  பிறகு அமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்

அப்போது அமைச்சர்

”தமிழகத்தில் ஏற்கனவே காலியாக உள்ள 1021 மருத்துவ காலி பணியிடங்களை நிரப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதைத்தவிர ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளதால் இதனையும் எம்.ஆர்.பி. மூலம் விரைவாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இன்னும் 208 மருத்துவமனைகள் தமிழகம் முழுவதும் திறக்கப்பட வேண்டும். அந்த மருத்துவமனைகள் தயாரானவுடன் அதற்கான பணி இடங்கள் நிரப்பப்படும்.  அதற்கான நடவடிக்கைகளும் விரைவில் எடுக்கப்படும்”

என்று கூறி உள்ளார்.