சென்னை
தற்போது சென்னையில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இன்று முதல் 5 நாட்களுக்குத் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவித்து இருந்தது.
தற்போது சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது.
குறிப்பாகச் சென்னை அடையாறு, பட்டினப்பாக்கம், மந்தைவெளி, தியாகராய நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், மாம்பலம், அசோக் நகர், கே.கே.நகர், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.