சென்னை: சேலம், திருச்சி, நெல்லைக்கான மெட்ரோ ரயில் சேவை சாத்தியக்கூறு ஆய்வறிக்கையை தமிழக அரசிடம் மெட்ரோ நிறுவனம் (ஆகஸ்ட் 31) சமர்ப்பித்தது/
திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, மற்றும் சேலம் மாநகரில் மெட்ரோ ரயில் சேவை மற்றும் துரித போக்குவரத்திற்கான சாத்தியக்கூறு அறிக்கை தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, இ.ஆ.ப., அவர்களிடம் சமர்பிக்கப்பட்ட உள்ளது.
சென்னை போன்ற நகரப்புறங்களில், பொதுமக்களின் விரைவான போக்குவரத்Jக்கு மெட்ரோ ரயில் சேவை பேருதவி புரிந்து வருகிறது. இதனால், மதுரை, கோவை உள்பட முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை கொண்டு வருவது தொடர்பாக தமிழ்நாடு அரசு, மெட்ரோ ரயில் நிர்வாகத்துடன் இணைந்து ஆய்வு நடத்தி வருகிறது. அடுத்தக்கட்டமாக மதுரை மற்றும் கோவையில் மெட்ரோ ரயில் சேவை கொண்டு வருவதற்கான ஆய்வு முடிவுகள் ஏற்கனவே வெளியிடப்பட்டு உள்ளன.
தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் மெட்ரோ ரயில் சேவை செயல்பாட்டில் இருக்கிறது. . சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய மத்திய அரசின் கூட்டு முயற்சியாகும்.கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சென்னை மெட்ரோ அமைப்பு இந்தியாவின் 4வது நீளமான மெட்ரோ நெட்வொர்க் ஆகும். . சென்னை மெட்ரோ அமைப்பில் உயரமான மற்றும் நிலத்தடி மெட்ரோ நிலையங்கள் உள்ளன. தடையற்ற இணைப்பு மற்றும் இயங்கும் தன்மையை உறுதி செய்யும் நோக்கில், சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன், சென்னை வெகுஜன விரைவு போக்குவரத்து அமைப்பை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
மார்ச் 2022 நிலவரப்படி, சென்னை மெட்ரோ இரண்டு செயல்பாட்டு மெட்ரோ பாதைகளையும் மூன்று கட்டுமானப் பாதைகளையும் கொண்டிருந்தது. சென்னை மெட்ரோ சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (CMRL) மூலம் கட்டப்பட்டு இயக்கப்படுகிறது . ஆலந்தூர் முதல் கோயம்பேடு வரையிலான பிரிவின் முதல் பகுதி ஜூன் 29, 2015 அன்று தொடங்கப்பட்டது, மேலும் திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரையிலான முதல் நிலத்தடி பாதை மே 14, 2017 அன்று திறக்கப்பட்டது. நேரு பூங்கா முதல் சென்னை சென்ட்ரல் வரை மற்றும் சைதாப்பேட்டை முதல் AG- DMS வரை, ஒரு வருடம் கழித்து மே 25, 2018 இல் திறக்கப்பட்டது. பிப்ரவரி 10, 2019 அன்று, AG-DMS முதல் புளூ லைனில் உள்ள வாஷர்மேன்பெட் வரையிலான நிலத்தடிப் பாதையானது, மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் 45 கிமீ நெட்வொர்க்கை நிறைவுசெய்தது.
வாஷர்மேன்பெட் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து விம்கோ நகர் வரை 9.5 கிமீ நீளம் நீட்டிப்பும் கட்டம் 1-ன் கீழ் முன்மொழியப்பட்டது. இதன் கட்டுமானம் ஜூலை 2016 இல் தொடங்கியது, மேலும் டிசம்பர் 2020 இல் வெற்றிகரமான சோதனை ஓட்டத்திற்குப் பிறகு, இந்த பாதை பிப்ரவரி 2021 இல் செயல்பாட்டுக்கு வந்தது. சென்னை மெட்ரோவின் 2வது கட்டமும் திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் முழு திட்டமும் 2026 இறுதிக்குள் முடிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
சென்னை போன்ற நகரப்புறங்களில், பொதுமக்களின் விரைவான போக்குவரத்Jக்கு மெட்ரோ ரயில் சேவை பேருதவி புரிந்து வருகிறது. இதனால், மதுரை, கோவை உள்பட முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை கொண்டு வருவது தொடர்பாக தமிழ்நாடு அரசு, மெட்ரோ ரயில் நிர்வாகத்துடன் இணைந்து ஆய்வு நடத்தி வருகிறது. அடுத்தக்கட்டமாக மதுரை மற்றும் கோவையில் மெட்ரோ ரயில் சேவை கொண்டு வருவதற்கான ஆய்வு முடிவுகள் ஏற்கனவே வெளியிடப்பட்டு உள்ளன.
இந்த நிலையில், அடுத்தபடியாக சேலம், திருச்சி, நெல்லை மாவட்டங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை உருவாக்குவதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்தது. அதன்பேரில் மெட்ரோ ரயில் நிறுவனம் சேலம், திருச்சி, நெல்லை மெட்ரோ ரயில் சேவைக்கான ஆய்வுகளை மேற்கொண்டு வந்தது. இந்த ஆய்வு முடிவுகளை, தமிழக அரசிடம் நேற்று (ஆகஸ்டு 31ந்தேதி, 2023) சமர்ப்பித்து உள்ளது. முதற்கட்ட பணிகளாக மூன்று மாவட்டங்களுக்கான விரிவான சாத்தியக்கூறு ஆய்வறிக்கை (DFR) தமிழக அரசிடம் மெட்ரோ நிறுவனம் சமர்ப்பித்துள்ளது.
திருச்சியில் 26 கிலோமீட்டருக்கு ஒரு கட்டமாகவும், 19 கிலோமீட்டருக்கு ஒரு வழித்தடமாகவும் என இரண்டு கட்டங்களாக மொத்தம் 45 கிலோ மீட்டருக்கு மெட்ரோ அமைப்பதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலத்திலும் மெட்ரோ வழித்தடம் அமைக்க சாத்தியக்கூறு உள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
நெல்லைக்கான சாத்தியக்கூறு ஆய்வறிக்கையில் மெட்ரோ அமைவதற்கான வாய்ப்பு இல்லை எனவும் லைட் மெட்ரோ மட்டுமே அமைக்க முடியும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வறிக்கை குறித்து விரைவில் தமிழக அரசு பரிசீலனை செய்து முடிவு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஹ