சென்னை: தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்திக்கான, அரசு விடுமுறையை வரும் 18- ம் தேதிக்கு (திங்கட்கிழமை) மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி விடுமுறை நாள் 17ஆம் தேதி என தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால், இது தவறு என்றும், பஞ்சாங்கப்படி, விநாயகர் சதுர்த்தி 18ந்தேதி என்பதால், அன்றைய தினம் அரசு விடுமுறை விட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது. சதுர்த்தி விடுமுறை நாள் குழப்பம் குறித்து ஆன்மிக தலைவர்களும், இந்து அமைப்பனிரும் போர்க்கொடி தூக்கினர். இதையடுத்து, விநாயகர் சதுத்தி விடுமுறை 17ந்தேதியில் இருந்து 18ஆம் தேதிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி அரசு விடுமுறை செப்.18-ந்தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே செப்.17-ந்தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் செப்.18-ந்தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் செப்.17-ந்தேதி அறிவிக்கப்பட்ட விடுமுறை ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்துக்களின் முக்கியமான விழாவான விநாயகர் சதுர்த்தி, விநாயகரின் அவதார தினமாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தி வரும் 18-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஆனால் அதற்கு ஒருநாள் முன்பாக தமிழக அரசு விடுமுறை அறிவித்தது.
பொதுவாக, அமாவாசையில் இருந்து 4-வது நாளே சதுர்த்தி வரும். அதன் அடிப்படையில் ஆவணி மாத அமாவாசையில் இருந்து 4-ம் நாளான செப்டம்பர் 18-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும்.
இதனிடையே, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 17-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. தமிழக அரசின் இந்த முடிவுக்கு, தமிழக பாஜக, இந்து முன்னணி அமைப்பின் நிர்வாகிகள், ஆன்மீக அன்பர்களும், சிவனடியார்களும், மடாதிபதிகளும், தலைவர்கள் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் விநாயகர் சதுர்த்திக்கான, விடுமுறையை வரும் செப்டம்பர் 18- ம் தேதிக்கு மாற்றி அரசு அறிவித்துள்ளது. மேலும், செப்டம்பர் 17-ம் தேதி அறிவிக்கப்பட்ட விடுமுறை ரத்து செய்துள்ளது.