பெங்களூரு: சூரிய மண்டலத்தை ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தயார் செய்துள்ள ஆதித்யா எல்-1 செயற்கை கோள் செப்டம்பர் 2ந்தேதி விண்ணில் பாய்கிறது . அன்றைய தினம் காலை 11.50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி தளத்தில் இருந்து விண்ணில் ஏவ இஸ்ரோ தயாராகி வருகிறது.
விண்ணில் பாய தயார் நிலையில் உள்ள ஆதித்யா எல்-1-ன் புதிய புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இந்த ஆதித்யா எல்1 என்ற விண்கலம் முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது பெங்களூரில் உள்ள வான் இயற்பியல் ஆராய்ச்சி மையம், புனேயில் உள்ள வானியல் ஆராய்ச்சி மையம் ஆகியவை, இந்த விண்கல வடிவமைப்பில் முக்கிய பங்காற்றியுள்ளன.
இந்த நிலையில், விண்ணில் பாய தயார் நிலையில் உள்ள ஆதித்யா எல்-1 புதிய புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டது. ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செப்.,2ல் காலை 11:50 மணிக்கு, சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்1 விண்கலம் பாய உள்ளது. மேலும், ‘விண்ணில் ஏவுவதற்கான சோதனைகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டது. விண்கலம் பூமியில் இருந்து சூரியனின் லெக்ராஞ்சியன் புள்ளி 1ல் நிலைநிறுத்தப்பட உள்ளது’ என இஸ்ரோ கூறியுள்ளது.
துவக்கத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. துவக்க ஒத்திகை – வாகன உள் சோதனைகள் முடிந்தன என்றும் குறிப்பிட்டுள்ளது.
சூரியனை ஆதித்யா-எல்1 எப்படி ஆய்வு செய்யும்?
VIDEO: https://www.youtube.com/watch?v=_IcgGYZTXQw&ab_channel=ISROOfficial