டெல்லி: காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக விவாதிக்க காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் இன்று கூடுகிறது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் 23 ஆவது கூட்டம் இன்று நடைபெறுகிறது.
காவிரி நதி நீர் பிரச்சினை தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒருங்காற்று குழு அமைத்து தீர்வு காணப்பட்டு வருகிறது. ஆனால், கர்நாடகாவில் ஆட்சி மாற்றங்கள் ஏற்படும்போதெல்லாம், தமிழ்நாட்டுக்கு உரிய காவிரி நீரை திறந்து விடாமல் சர்ச்சையை ஏற்படுத்துவது வாடிக்கையாகி வருகிறது. தற்போதுள்ள காங்கிரஸ் அரசும், அதுபோல தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய தண்ணீரை தராமல் முரண்டு பிடித்து வருகிறது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு, கர்நாடக மாநில அரசு மீது வழக்கு தொடர்ந்து உள்ளது.
இதற்கிடையில், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் இன்று கூடுகிறது. தஞ்சை டெல்டா பகுதியில் போதிய தண்ணீர் இன்றிய குறுவை நெற்பயிா் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள நிலையில், காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில், தமிழகத்திற்கு உடனடியாக தினசரி 5 ஆயிரம் கன அடி தண்ணீரை கா்நாடகம் திறந்துவிட வேண்டும்கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக இன்று தலைநகர் டெல்லியில், காவிரி நிதி நீா் மேலாண்மை ஆணையக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இதில் ஒழுங்காற்று குழு கூட்டத்தின் முடிவு குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டு உத்தரவிடப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
கா்நாடகத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், அங்குள்ள கிருஷ்ணராஜ சாகா், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய நான்கு அணைகள் நிரம்பும் தருவாயில் உள்ளது. மொத்தம் 72 டிஎம்சி தண்ணீா் அணைகளில் உள்ளது குறிப்பிடத்தக்கது.