சென்னை: உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பத்திரிகை புகைப்பட கலைஞர்களை புகைப்படம் எடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
ஒரு காலத்தில் கருப்பு வெள்ளையாக காணப்பட்ட புகைப்படங்கள் டிஜிட்டல் வளர்ச்சி காரணமாக இன்று பல வண்ணங்களில் கண்ணை கவரும் வகையில் காணப்படுகிறது. இன்றைய நவீன யுகத்தில் புகைப்படம் எடுத்தல் என்பது காலத்தால் அழியாத கலை வடிவமாக நிற்கிறது,
உலகம் முழுவருதும் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி உலக புகைப்படத் தினமாக கொண்டாடப்படுகிறது, உலக புகைப்பட தினத்தின் தோற்றம் ஆகஸ்ட் 19, 2010 அன்று ஆஸ்திரேலிய புகைப்படக் கலைஞர்கள் கோர்ஸ்கே ஆரா மற்றும் டிம் ஹார்வி ஆகியோர் இந்த முயற்சியைத் தொடங்கினார்கள். இந்த நாள் அதன் முதல் உலகளாவிய ஆன்லைன் கேலரியை நடத்தியது. 270 க்கும் மேற்பட்ட புகைப்படக் கலைஞர்கள் தங்கள் புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டனர் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த புகைப்பட ஆர்வலர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிட்டனர், இது உலக புகைப்பட தினத்தை எட்டிய முதல் அதிகாரப்பூர்வத்தைக் குறிக்கிறது. இன்றைய நாளில், புகைப்பட கலைஞர்கள், தொழில்நுட்ப முன்னேற்றங்களை வரவேற்பதுடன், லென்ஸின் பின்னால் உள்ள கலைத்திறன் மற்றும் படைப்பாற்றலைக் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு பத்திரிகை மற்றும் ஊடகத்துறையைச் சேர்ந்த புகைப்பட கலைஞர்கள், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் குவிந்தனர். அவர்களை பார்த்த முதலமைச்சர், தன்னிடம் இருந்த காமிரா மூலம், அங்கிரருந்த பத்திரிக்கை புகைப்படக் கலைஞர்களை முதல்வர் புகைப்படம் எடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
இதுதொடர்பாக பதிவிடப்பட்டுள்ள டிவிட்டில், உலக புகைப்பட தினத்தையொட்டி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் மற்றும் புகைப்படக்கலைஞர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்று, முதலமைச்சர் அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.