ராமநாதபுரம்
தமிழகத்தை திமுக நிரந்தரமாக ஆள வேண்டும் என்பது கருணாநிதியின் கனவு என முதல்வர் மு க ஸ்டாலின் உரையாற்றி உள்ளார்.
இன்று ராமநாதபுரத்தில் திமுக தென்மண்டல அளவிலான வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது. . திமுக. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தென்மாவட்டங்களில் உள்ள 10 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், முகவர்கள் மத்தியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
அப்போது அவர்,
”திமுக அரசு ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஏராளமான திட்டங்களைச் செய்து கொடுத்துள்ளது. இத்தகைய திட்டங்களால் பின்தங்கியிருந்த ராமநாதபுரம் மாவட்டம் முன்னேறியுள்ளது,
திமுக அரசு ராமநாதபுரத்தில் கிராம சாலைகள், நெடுஞ்சாலைகளாகத் தரம் உயர்த்தியது.
திமுக அரசு தண்ணியில்லா காடாக இருந்த ராமநாதபுரத்திற்குத் தண்ணீர் கொண்டு வந்தது. திமுக ஆட்சிதான் ராமநாதசாமி கோவிலில் தங்கத் தேரை ஓட வைத்தது
திமுக அரசு ராமநாதபுரம் மாவட்டத்திற்குக் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தைக் கொண்டு வந்தது மேலும் 5,000 சுனாமி மறுவாழ்வு குடியிருப்புகளைக் கட்டிக் கொடுத்தது.
தமிழகத்தை திமுக தான் நிரந்தரமாக ஆள வேண்டும் என்பது முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கனவு. நாம் அந்தக் கனவை நிறைவேற்றுவோம்”
என உரை ஆற்றினார்.