இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் 2022 ம் ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லி அருகே நடைபெற்ற பெரும் கார் விபத்தில் இருந்து உயிர்தப்பியது நினைவிருக்கும்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த ரிஷப் பந்த்-க்கு வலது கால் மூட்டில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பின் சுமார் ஏழு மாத கால ஆன நிலையில் ரிஷப் பந்த் உடல் நிலை தேறிவருவதாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
காயம் காரணமாக ஐபிஎல் 2023 மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி உள்ளிட்ட பல முக்கிய போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ரிஷப் பந்த் தேசிய கிரிக்கெட் அகாடெமியில் வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். தொடர் பயிற்சியில் ஈடுபட்டு வரும் இவர் தனது உடலில் எந்தவித வலியும் சோர்வும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
Rishabh Pant's batting practice, recovery has been excellent.
– Great news for Indian cricket. pic.twitter.com/KThpdkagDz
— Johns. (@CricCrazyJohns) August 16, 2023
இதுகுறித்து தெரிவித்துள்ள பிசிசிஐ அதிகாரிகள் ரிஷப் பந்த் தற்போது 140 கி.மீ. வேகத்தில் வரும் பந்துகளை கூட எதிர்கொள்வதாக தெரிவித்தனர். மேலும், 2024 ம் ஆண்டு ஜனவரி மாதம் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற உள்ள டெஸ்ட் போட்டியில் இடம்பெற வாய்ப்பிருப்பதாகக் கூறியுள்ளனர்.