சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் ‘திஷா’ கண்காணிப்பு குழு கூட்டத்தில், திஷா கண்காணிப்பு குழுவை சேர்ந்த அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்எல்ஏக்கள் உள்பட குழு உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திஷா கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் துறைகளைச் சேர்ந்த அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் திட்டங்களை கண்காணித்தால்தான் அவை தொடர்ந்து தொய்வின்றி நடைபெறும் என தெரிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திஷா கூட்டம் நடைபெறுகிறது. மத்திய அரசு மற்றும் பல்வேறு துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை கண்காணிப்பது குறித்து ஆலோசிக்க அமைக்கப்பட்டுள்ள குழுவின் இந்த கூட்டத்தில், உறுப்பினர்களாக அமைச்சர் ஐ.பெரியசாமி, எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், பி.ஆர்.நடராஜன் உள்ளனர். மேலும், எம்.பி.க்கள், திருநாவுக்கரசர், திருமாவளவன், நவாஸ்கனி, ஆர்.எஸ்.பாரதி, நவநீதகிருஷ்ணன் ஆகியோர் உள்ளனர். இவர்களுடன் எம்.எல்.ஏ.க்கள் வி.ஜி.ராஜேந்திரன், டாக்டர் எழிலன், நீலமேகம், பூமிநாதன், அசன் மவுலானா, செங்கோட்டையன் குழுவில் உள்ளனர். மேலும், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் மற்றும் துறைசார்ந்த வல்லுநர்களும் உள்ளனர்
இந்த கூட்டத்தில், மத்தியஅரசின் 100 நாள் வேலை திட்டம், தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம், அனைவருக்கும் கல்வி திட்டம் பற்றி ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. ஐல் ஜீவன் திட்டங்களின் நிலை குறித்து விரிவாக ஆலோசிக்கப்படுகிறது. மேலும் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம், பிரதம மந்திரி திறன் மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்படுகிறது.
இந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், திட்டங்களை கண்காணித்தால்தான் அவை தொய்வின்றி நடைபெறும் என்றவர், இந்த ஆண்டு 10,000 சுயஉதவிக் குழுவினருக்கு பயிற்சி வழங்க நடவடிக்கை. 3,000 கிராம ஒழிப்பு சங்கங்களுக்கு வறுமை குறைப்பு நிதியாக ரூ.7.50 கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. சுய உதவிக் குழுக்களுக்கு இந்தாண்டில் ரூ.25,000 கோடி நிதி வழங்க முடிவு எனவும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நடைபெறும் திஷா ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் பேசியுள்ளார்.