சென்னை: ஆகஸ்டு 25ந்தேதி முதல் தமிழ்நாட்டின் அரசு ஆரம்ப பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மறைந்த முதல்வர் கருணாநிதி படித்த பள்ளியில், முதலமைச்சர் ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்ய அரசு 33.56 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.   இதன் மூலமாக தமிழகத்தில் 1.14 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு காலையில் சூடான மற்றும் சத்தான உணவு வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் அரசு அரசு பள்ளிகளில் படிக்க வரும் மாணவர்களின் பசியைப்போக்க திமுக அரசு கடந்த ஆண்டு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு சத்தான காலை உணவு வழங்கும் திட்டத்தை 2022ம் ஆண்டு செப்டம்பர் 15ந்தேதி அன்று தொடங்கியது. முதல்கட்டமாக  முதற்கட்டமாக 1969 பள்ளிகளைச் சேர்ந்த 1,54,108 மாணவர்கள் தமிழ்நாடு காலை உணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகின்றனர். இந்த திட்டத்தை தமிழக அரசு மேலும் 30,122 பள்ளிகளில் விரிவுப்படுத்தப்பட உள்ளதாகவும், இதற்காக அரசு ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

இதையடுத்து காலை சிற்றுண்டி திட்டத்தை விரிவுபடுத்தவதற்கான பணிகளைத் தீவிரப்படுத்தப்பட்டது. அதன்படி வரும் கல்வியாண்டு முதல் 30,122 அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் விரிவுபடுத்தப்படுவதன் மூலமாக 18 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு தேவைப்படும் காலை சிற்றுண்டியை தயாரிக்க ஏதுவான இடங்கள், திட்டத்தை செயல்படுத்தும் சுய உதவிக் குழுக்கள் ஆகியவற்றை உடனடியாக தேர்வு செய்ய ஒவ்வொரு ஊராட்சியிலும் ஒருங்கினைப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அதை விரிவாக்கம்  ஆகஸ்டு 25ந்தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஆகஸ்டு 25, 2023 முதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது. பள்ளி வேலை நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இலவச காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.  இதன் மூலமாக தமிழகத்தில் 1.14 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு காலையில் சூடான மற்றும் சத்தான உணவு வழங்கப்படுகிறது. அதாவது பள்ளி மாணவர்களுக்கு உப்புமா, கோதுமை ரவா, வெண்பொங்கல், கிச்சடி ஆகியவை காலை சிற்றுண்டியாக வழங்கப்படுகிறது.

இந்த விரிவாக்கத்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் மறைந்த கருணாநிதி படித்த திருவாரூர் திருக்குவளை அரசு பள்ளியில், ஆகஸ்டு 25ந்தேதி அன்று தொடங்கி வைக்கிறார். அதைத்தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளிலும் இந்ததிட்டம் செயல்பாட்டு வருகிறது. 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் ஒவ்வொரு மாணவரும் தங்கள் அரசு தொடக்கப்பள்ளியில் இலவச காலை உணவு பெற தகுதியுடையவர்கள். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.