சென்னை: கஞ்சா இல்லாத தமிழ்நாடு என்ற இலக்கில் அரசு உறுதியாக உள்ளது என காவல்துறை சார்பில் ‘போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
காவல்துறை சார்பில் ‘போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’ என மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். இதையடுத்து, காவல்துறையால் செங்கல்பட்டு, சேலம், தஞ்சை, நெல்லை மண்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 13,000 கிலோ கஞ்சா முதலமைச்சர் முன்னிலையில் அழிக்கப்பட்டது.
இதையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் போதைப்பொருட்கள் ஒழிப்பு உறுதி மொழி ஏற்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், போதைப்பொருள் குறித்து தமிழ்நாடு இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில், போதைப் பொருளை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அக்கறை மிகுந்த எண்ணத்தோடு ‘போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு’ என்ற’ திட்டம் தொடங்கி செயல்பட்டு வருகிறது.
போதைக்கு அடிமையானவர்கள் அனைவருக்கும் சுமையாக உள்ளனர் என்ற முதலமைச்சர், போதைப்பொருள் ஒழிப்பில் சர்வாதிகாரியாக செயல்படுவதில் உறுதியாக இருக்கிறேன் என்றார். மேலும், மாணவர்கள், இளைஞர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவதால் எதிர்க்காலத்தை இழக்கின்றனர். போதைப்பொருள் பயன்பாடு தனி மனிதர் மட்டுமின்றி அவர் சார்ந்த சமூகத்திற்கும் பாதிப்பு ஏற்படுத்தும் என்றதுடன், போதைப்பொருட்கள் பயன்பாடு மாநிலத்தின் வளர்ச்சியை பாதிக்கும். என்றும் தெரிவித்தார்.
போதைப்பொருட்களை விற்பனை செய்வோரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு வருகின்றன என்று எச்சரித்தவர், போதைப்பொருட்களால் பாதிக்கப்பட்ட மாணவர்களை மீட்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது. கஞ்சா இல்லாத தமிழ்நாடு என்ற இலக்கில் அரசு உறுதியாக உள்ளது என்றும் கூறினார்.
போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களின் சொத்துகள் முடக்கப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்துள்ளார். போதை பொருட்கள் பயன்பாட்டை தடுக்க கடலோர மாவட்டங்களில் கண்காணிப்பை அதிகபப்டுத்த வேண்டும் என்றும், அண்டை மாநிலங்களில் இருந்து போதைப் பொருட்களை கடத்தி வருவது போன்றவற்றையும் கண்காணிக்க தீவிர நடவடிக்கை எடுக்கபப்ட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார். போதைப் பொருள் பயன்பாட்டை தடுக்க எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கபப்ட்டு வருகிறது என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.