சென்னை: புதுப்பிக்கப்பட்ட 100 மஞ்சள் கலர் பேருந்துகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சார்பாக புனரமைக்கப்பட்ட பேருந்துகளுக்கு மஞ்சள் நிறம் அடிக்கப்பட்டு, நவீன வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. இந்த பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன.
தமிழ்நாட்டை ஆளும் அரசுகள் தங்கள் விருப்பப்படி அரசுப் பேருந்துகளின் நிறத்தை மாற்றி வருவது வாடிக்கையாக உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் பேருந்துகள் பச்சை நிறத்தில் மாற்றப்பட்டு இயக்கப்பட்டு வந்தன. பின்னர் புதிதாக வாங்கப்பட்ட பி.எஸ் 4 ரக பேருந்துகள் நீல நிறத்திற்கு பேருந்துகள் மாற்றப்பட்டது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் புறநகர் செல்லும் பேருந்துகள் நீல நிறத்திலும், மாநகர மற்றும் நகரப் பேருந்துகள் சிவப்பு நிறத்திலும் இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில், திமுக ஆட்சிக்கு வந்ததும், தற்போது, தங்களது மறைந்த தலைவர் கருணாநிதிக்கு பிடித்த கலரான மஞ்சள் கலருக்கு மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே மகளிர் பேருந்துகள் பிங்க் கலரில் மாற்றப்பட்ட நிலையில், தற்போது, பள்ளி, கல்லூரி பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் கலரான மஞ்சள் கலரில் அரசு பேருந்துகள் மாற்றப்பட்டு உள்ளன.
ஏற்கனவே பச்சை நிறத்தில் இருக்கும் வெளியூர் பயண பேருந்துகளான எஸ்இடிசி பேருந்துகளுக்கு வெள்ளை – மஞ்சள் நிறத்திற்கு மாற்றப்பட்டு வருகின்றன. . இதையடுத்து தற்போது 100 பழைய அரசு பேருந்துகள் சரி செய்யப்பட்டு, வண்ணம் தீட்டப்பட்டு, மஞ்சள் நிறத்தில் இயக்கப்படுகின்றன.
இது தொடர்பாக @tnstcbus குழு வெளியிட்டுள்ள டிவிட்டில்,
1. பேருந்துகளில் தலையணை உடனான படுக்கைகளை அமைத்தல் (Builtin Pillows on Sleeper)
2. யூஎஸ்பி சார்ஜர்களுக்கு பதிலாக சாதாரண சார்ஜிங் பாயின்களை அமைத்தல் (Conventional Charging ports Instead of easily damageable USB Charging points) ,
3. எளிதில் அழுக்கடையும் துணியாலான இருக்கைகளுக்கு பதிலாக ரெக்சின் இருக்கைகள் (Rexin seats instead of cloth ones).
போன்ற மாற்றங்களை செய்ய தமிழ்நாடு அரசு செய்துள்ளது.
இந்த மாற்றங்களோடுதான் தற்போது மஞ்சள் பேருந்துகள் அமலுக்கு வந்துள்ளன. அதேபோல் பேருந்துகளில் புதிய கண்ணாடிகள்,. உள் பக்கம், டிஜிட்டல் போர்ட், இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும்
1. இருக்கைகள், ஜன்னல்கள், வாசிப்பு விளக்குகளின் தரம் உறுதி செய்யப்பட வேண்டும்
2. பஸ்ஸின் உட்பக்கத்தை சுத்தம் செய்தல் குறிப்பாக ஜன்னல்கள் மற்றும் திரைகளை சுத்தம் செய்தல்
3. பேருந்துகள் செல்லும் வேகத்தை அதிகரிக்க வேண்டும்
4. மாநிலம் முழுவதும் கால அட்டவணை வெளியிடப்பட வேண்டும்.
5. அதிக எண்ணிக்கையிலான படுக்கை பேருந்துகள் மீது கவனம் செலுத்த முடிவு எடுக்கப்பட வேண்டும்.
6. ஏசி பேருந்துகளை அதிகரிக்க வேண்டும் போன்ற மாற்றங்களும் செய்யப்பட உள்ளன என கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புதுப்பிக்கப்பட்ட 100 மஞ்சள் கலர் பேருந்துகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். சென்னை தீவுதிடலில் நடைபெற்ற விழாவில் முதல்வர் ஸ்டாலின் இந்த பேருந்துகளை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
முன்னதாக, அரசு போக்குவரத்து கழகத்தில் உள்ள 500 பேருந்துகளை புதுப்பிக்க ரூ.500 கோடி ஒத்துக்கப்பட்டது. முதல் கட்டமாக புதுப்பிக்கப்பட்ட 100 பேருந்துகள் நாளை பயன்பாட்டுக்கு வர உள்ளன. இந்த பேருந்துகள் தமிழ்நாடு முழுக்க நீண்ட தூர பயணங்களுக்கு இந்த பேருந்துகள் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மாநிலம் முழுவதும் உள்ள 8 கோட்டங்களில், சேதமடைந்த பேருந்துகள் சீரமைப்பில் ஒரு பகுதியாக பழைய வண்ணம் மாற்றப்பட்டு, மஞ்சள் மற்றும் வெளிர் மஞ்சள் நிறத்துக்கு பேருந்துகள் மாற்றப்பட உள்ளது. நிறம் மட்டுமின்றி, பேருந்துகளின் இருக்கை, அமரும் வசதி போன்றவை விரிவாக இருக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சிறப்பாக செயல்பட்டாலும் பேருந்துகள் அவ்வளவு சிறப்பானதாக இருக்காது. கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் அதிநவீன பேருந்துகள் போக்குவரத்துக்கு பயன்படுகின்றன. ஆனால் தமிழ்நாட்டில் அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சார்பாக நவீன பேருந்துகள் வாங்கப்படுவது குறைவாகவே உள்ளது. கர்நாடகாவில் இருக்கும் அரசு விரைவு பேருந்துகள் வேற லெவல் தரத்தில் உள்ளன. உதாரணமாக கர்நாடகாவின் ஐராவத் போன்ற பேருந்துகள் தனியாரை விட அதிக வசதி கொண்டதாக மக்கள் விரும்பும் விரைவு பேருந்துகளாக உள்ளன. இந்த நிலையில்தான் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சார்பாக விரைவு பேருந்துகளில் அதிரடி மாற்றங்களை செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சமீபத்தில் 450 டவுன் பஸ்களை வாங்குவதற்கு டெண்டர் எடுத்துள்ளது.பிரிவு வாரியாக ஒதுக்கப்பட்ட பேருந்துகளின் பட்டியல் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் விழுப்புரம்- 82 தமிழ்நாடு போக்குவரத்து கழகம் கும்பகோணம்- 112 தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சேலம்-44 தமிழ்நாடு போக்குவரத்து கழகம் கோயம்புத்தூர்-52 தமிழ்நாடு போக்குவரத்து கழகம் மதுரை-99 தமிழ்நாடு போக்குவரத்து கழகம் திருநெல்வேலி-61 மொத்தம்-450 பேருந்துகள் வாங்கப்பட்ட உள்ளது.