நிலவை ஆய்வு செய்ய இந்தியாவின் சந்திரயான்-3 கடந்த ஜூலை மாதம் 14 ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது.

மார்க்-III ஏவுகணை வாகனம் மூலம் ஏவப்பட்ட இந்த விண்கலம் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நிறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நிலவை நெருங்கிச் செல்ல ஆரம்பித்த சந்திரயான்-3 நிலவின் ஈர்ப்பு விசையை உணர்வதாக தகவல் அனுப்பியது.

https://twitter.com/chandrayaan_3/status/1688215948531015681

இந்த நிலையில் ஆகஸ்ட் 5 ம் தேதி நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நிறுத்துவதற்காக அதன் அருகே சென்ற சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து முதன் முதலாக எடுக்கப்பட்ட நிலா-வின் புகைப்படத்தை இஸ்ரோ நேற்று வெளியிட்டுள்ளது.