ஜெர்மனி-யில் இருந்து எகிப்து-க்கு சென்று கொண்டிருந்த சரக்கு கப்பல் ஒன்றில் தீப்பிடித்ததை அடுத்து அதில் இருந்த மாலுமிகள் நடுக்கடலில் சிக்கித் தவித்தனர்.
நெதர்லாந்து கடற் பகுதியை ஒட்டி நடைபெற்ற இந்த சம்பவத்தில் ஒரு இந்திய மாலுமி கடலில் குதித்து உயிரிழந்தார் அதில் பயணம் செய்த மேலும் 20 இந்திய மாலுமிகளை நெதர்லாந்து அரசு உயிருடன் மீட்டுள்ளது.
4000 க்கும் மேற்பட்ட எலக்ட்ரிக் கார்களை ஏற்றிக்கொண்டு சென்ற 11 அடுக்குகளைக் கொண்ட மாபெரும் சரக்கு கப்பலின் மேலடுக்கில் கடந்த வாரம் ஜூலை 25ம் தேதி தீப்பிடித்தது.
கப்பல் தீப்பிடித்ததை அடுத்து அதிலிருந்த ஒரு மாலுமி உயிர் பிழைக்க கடலில் குதித்த நிலையில் அவர் உயிரிழந்தார். இதனையடுத்து கப்பலில் இருந்த மாலுமிகளை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டது.
அதில் 20 பேரை மீட்டு அவர்களுக்கு தேவையான முதலுதவி மற்றும் மருத்துவ சிகிச்சைகளை கப்பல் நிறுவனத்துடன் இணைந்து நெதர்லாந்து அரசு மேற்கொண்டது.
கடலில் உயிரிழந்தவரின் சடலத்தை மீட்ட அதிகாரிகள் உடலை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்றபோதும் கப்பலில் கிடைத்த குரல் பதிவுகளை வைத்து பார்க்கும்போது எலக்ட்ரிக் காரின் பேட்டரி வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் கப்பலில் தீ பிடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.