மும்பை:
பாலிவுட்டில் லகான், ஜோதா அக்பர் உள்பட ஏராளமான வெற்றிப்படங்களில் பணியாற்றிய கலை இயக்குனர் நிதின் தேசாய் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவருக்கு வயது 57.

தேவதாஸ்’, ‘ஜோதா அக்பர்’ மற்றும் ‘லகான்’ உள்ளிபட ஏராளமான பிளாக்பஸ்டர் ஹிட் படங்களுக்கு ஆடம்பரமான அரங்குகளை வடிவமைத்து கொடுத்து புகழ்பெற்ற கலை இயக்குராக வலம் வந்தார் நிதின் தேசாய்.
இவர் சிறந்த கலை இயக்கத்திற்கான தேசிய திரைப்பட விருதை நான்கு முறை பெற்றிருக்கிறார். இப்படி பல்வேறு பெருமைமிகு படைப்புகளில் பணியாற்றிய அவர் மும்பை கர்ஜத் பகுதியில் அமைந்துள்ள தனது ஸ்டுடியோவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வருகிற ஆகஸ்ட் 9-ந் தேதி அவர் தனது 58-வது பிறந்தநாளை கொண்டாட இருந்த நிலையில், திடீரென இப்படி ஒரு விபரீத முடிவை எடுத்துள்ளது அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
[youtube-feed feed=1]