டெல்லி: மணிப்பூர் விவகாரத்தை கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சிகள் இன்று 9வது நாளாக நாடாளுமன்றத்தை முடக்கி உள்ளன. இதனால், மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவை பகல் 12மணி வரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
.அரசியல் கட்சியினரின் அநாக நடவடிக்கைகளால் பலகோடி ரூபாய் மக்கள் பணம் வீணடிக்கப்பட்டு வருகிறது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜுலை 20ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடங்கிய நாள் முதல் மணிப்பூர் விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று 9வது நாள் கூட்டத்தொடர் காலை 11 மணி அளவில் தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவை பகல் 12மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சீனாவுடனான எல்லைப் பிரச்னை குறித்து விவாதிக்கக் கோரி காங்கிரஸ் எம்பி மணீஷ் திவாரி மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்தார். அதுபோல, ஜெய்ப்பூர்-மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விவாதிக்க கோரி மக்களவையில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்தார்