சென்னை:
மிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெப்பநிலை இயல்பைவிட 2 – 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் இன்றும் நாளையும் வெப்பம் அதிகரிக்கும் என்றும், வெப்பத்தால் அசவுகரியங்கள் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெப்பத்தின் தாக்கம் தொடரும் வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல்

அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக் கூடும் என்றும், இயல்பான வெப்பநிலை வழக்கத்தை விட 4 டிகிரி வரை கூடுதலாக இருக்கும், அதிகபட்ச வெப்பநிலை 38 முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.