சென்னை
இரு சென்னை தொழிலதிபர்களை அமலாக்கத்துறை சிறப்பு நீதிமன்றம் தப்பியோடிய பொருள்ளாதார குற்றவாளிகளாக அறிவித்துள்ளது.
சிபிஐ சென்னையை சேர்ந்த தொழிலதிபர்கள் சுதர்சன் வெங்கட்ராமன், ராமானுஜம் சேஷரத்தினம். இவர்கள், பல்வேறு போலியான ஆவணங்களை தயாரித்து, ரூ.186 கோடி ரூபாய் வரை மோசடி செய்திருப்பதாக வழக்குப்பதிவு செய்தது. இதன் அடிப்படையில், இவர்கள் மீது சட்ட விரோத பண பரிவர்த்தனை மோசடி சட்டத்தின் கீழ் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர்.
இவர்கள் இருவரும் அமெரிக்காவில் உள்ள கம்பெனிக்கு மானியத் தொகை கொடுக்கப் போவதாக கூறி ரூ.58.12 கோடியை வெளிநாட்டுக்கு எடுத்துச் சென்றதாகவும், பல்வேறு போலி ஆவணங்கள் மூலமும், தனியார் கம்பெனி அதிகாரிகள், ஊழியர்கள் மூலமாகவும் பல வங்கிகளில் கடன் பெற்றும் மோசடி செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
தற்போது இந்த இருவரையும், அமலாக்கப்பிரிவு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக அறிவித்துள்ளது. அவர்கள் பெயர்களில் உள்ள 33 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை முடக்கவும் நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது.