டலூர்

ன்று மாலை 6 மணிக்குப் பிறகு கடலூர் மாவட்டம் முழுவதும் அரசு பேருந்து சேவையை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது பாமக. என்எல்சியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய நிலையில், அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார். .

இதைத் தொடர்ந்து அங்குக் கலவரம் ஏற்பட்டது. அதில் பாமகவினர் கற்களை எறிந்து தாக்கியதால்,காவல்துறையினர் தடியடி உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அப்பகுதி போர்க்களமாகக் காட்சியளித்தது.  காவல்துறையினர் கலவரத்தை கட்டுப்படுத்த வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி எச்சரித்தனர்.

சில காவலர்கள் பாமகவினர் கல் வீசி தாக்கியதில் காயம் அடைந்தனர். போராட்டம்  தற்போடு முழுமையாகக் கட்டுக்குள் வந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிகழ்விடத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் முழுவதும் மாலை 6 மணிக்குப் பிறகு அரசு பேருந்து சேவையை முழுமையாக நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. நெய்வேலியில் நடந்த பாமக போராட்டம் வன்முறையில் முடிந்ததைத் தொடர்ந்து போக்குவரத்துக் கழகம் இவ்வாறு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதாவது பள்ளி – கல்லூரி மாணவ, மாணவிகள் வீடுகளுக்குத் திரும்பியதை உறுதிப்படுத்திய பிறகு சேவையை நிறுத்த போக்குவரத்துக் கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

[youtube-feed feed=1]