கொல்கத்தா

மேற்கு வங்காளத்தில் ஐபோன் வாங்க 8 மாதக் குழந்தையைத் தம்பதிகள் விற்பனை செய்துள்ளனர்

மேற்கு வங்க மாநிலம், வடக்கு 24 பர்கானா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஷதி, ஜெயதேவ் என்கிற தம்பதி 10 மாதம் சுமந்து பெற்றெடுத்த குழந்தையை சமூக வலைத்தள மோகத்தால் விற்பனை செய்து உள்ளனர். அவர்கள் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுவதற்காக ஐபோன் வாங்க இந்த காரியத்தைச் செய்து உள்ளனர்.

மிகவும் பொருளாதார நெருக்கடியில் இருந்த தம்பதியினர் திடீரென ஐபோன் வாங்கியதை அக்கம்பக்கத்தினர் கவனித்து இது குறித்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்து உள்ளனர். காவல்துறையினர்  குழந்தையை விற்ற தாய் ஷதி மற்றும் வாங்கிய பிரியங்கா கோஷ் என்ற பெண் ஆகியோரை கைது செய்துள்ளனர்.

காவல்துறையினர் தலைமறைவாக உள்ள குழந்தையின் தந்தை ஜெயதேவை தேடி வருகின்றனர்.  குழந்தையை விற்று பணத்தைப் பயன்படுத்தி மேற்கு வங்காளத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று இன்ஸ்டாகிராம் ரீல்களை உருவாக்கினோம் என்று அந்த தாய் ஒப்புதல் அளித்து உள்ளார்.

மேலும் அதிர்ச்சியூட்டும் வகையில் ஏற்கனவே ஏழு வயது மகளை இந்த தந்தை விற்க முயன்றதாகவும் தகவல்கள் வந்துள்ளன.