மும்பை

ன்று மும்பை நகரில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களுக்கும் கனமழையால் விடுமுறை விடப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக டில்லி, இமாசல பிரதேசம், குஜராத், மராட்டியம், தெலுங்கானா உள்ளிட்ட பல வடமாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இஎத கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

மும்பை பெருமாநகராட்சி வெளியிட்ட செய்தியில், கனமழையை முன்னிட்டு ஜூலை 27-ந்தேதி (இன்று) மும்பை நகரம் மற்றும் புறநகர பகுதிகளைச் சேர்ந்த அனைத்து மாநகராட்சி, அரசு மற்றும் தனியார் அமைப்புகளின் முதன்மை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் அனைத்திற்கும் விடுமுறை விடப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது..

மேலும் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் கடந்த 25 மற்றும் 26 ஆகிய நாட்களில் மும்பையில் மிகவும் கனமழை பெய்ததாகத் தெரிவித்து உள்ளது.

 

[youtube-feed feed=1]