சிவகங்கை: மதுரை அழகர் கோயிலில் உள்ள பதினெட்டாம்படி கருப்பணசாமிக்கு சுமார் 450 கிலோ எடையுடன், 18.5 அடி உயர அரிவாள்  நேர்த்தி கடனமாக செலுத்தப்பட்டது. இந்த அரிவாள் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள பட்டறையில் செய்து, அதை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் வீடியோ வைரலாகி வருகிறது.

மதுரை என்றாலே நினைவுக்கு வருவது சித்திரைத் திருவிழா. அத்துடன் மதுரை மீனாட்சி, சுந்ரேசுவரன் மற்றும் கள்ளழகர்.  கள்ளழகருக்கு காவல் தெய்வமாக விளங்குபவர்  பதினெட்டாம்படி கருப்பண்ணசகாமி. இந்த கருப்பண்ணசாமி  ஆலயம் மதுரை அழகர் கோயிலில் வளாகத்தில் உள்ளது.  பதினெட்டாம்படி கருப்பசாமி மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்களுக்கும் மதுரை சுற்றுவட்டார மக்களுக்கும் காவல் தெய்வமாகவும் குல தெய்வமாகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  மதுரை உள்பட அந்த பகுதி மக்களின் காவல் தெய்வமாக இருக்கும் பதினெட்டாம்படி கருப்பசாமி. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக கூறப்படுகிறது .  பலருக்கும் குலதெய்வமாகவும் பலருக்கு இஷ்ட தெய்வமாகவும் இருந்து அருள் புரிந்து வருகிறார். கருப்பசாமியிடம் முறையிட்டால் நிச்சயம் நியாயம் கிடைக்கும் என்பது மக்கள் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கை.

தற்போது  ஆடி மாதம் தொடங்கிய நிலையில், கள்ளழகர் கோயில் ஆடித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது. இதையொட்டி கருப்பண்ணசாமி கோவலிலும் விசேஷ பூஜைகள் நடைபெற்றது.   அழகர் கோவில் பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவிலுக்கு சந்தனம் சாத்தி வழிபாடு நடைபெற்றது.   18 படிகளிலிலும் தீபம் ஏற்றப்பட்டு கதவுகள் திறக்கப்பட்ட உடன் கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா முழக்கமிட்டு வழிபட்டனர்.

பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி,   அழகரையும், அவர் அருள்பாலிக்கும்  மலையையும் காவல் காத்து வருகிறார் . இவருக்கு உருவம் இல்லை. மூடப்பட்ட கதவு குடம் குடமாய் ஊற்றி பூசப்பட்ட சந்தனம், கதவை அலங்கரிக்கும் அழகிய நிலை மாலை என கம்பீரமாக காட்சி தருகிறார். பதினெட்டாம்படியான் என்று பக்தர்களால் அன்போடு அழைக்கப்படும் கருப்பண்ணசாமியை வணங்கினால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை. கோவில் நகைகளை காவல் தெய்வம் கருப்பசாமியே பாதுகாத்து வருகிறார் என்பது பல காலமாக தொடர்ந்து வரும் நம்பிக்கை.

கோவில் சம்பிரதாயம் தினசரியும் அழகர்மலை கோவில் பூட்டபட்டதும்,கதவின் சாவி பதினெட்டாம் படி கருப்பசாமியின் முன்பு வைத்துவிட்டு செல்வர். மறுநாள் காலையில் கருப்பசாமியின் முன்பு உள்ள சாவியை பெற்று கோவில் கதவை திறக்கும் சம்பிரதாயம் இன்று வரை நடைபெற்று வருகிறது .

நகை கணக்கு சித்திரை திருவிழாவிற்கு வைகை ஆற்றில் இறங்குவதற்காக தங்கப்பல்லாக்கில் மதுரைக்கு புறப்படும்போது அழகர் அணிந்துள்ள தங்க நகைகள் ஆபரணங்கள் எண்ணப்பட்டு அந்த பட்டியல் பதினெட்டாம் படி கருப்பண்ணசாமி முன்பு படித்து காட்டப்படும். அதே போல மதுரையில் இருந்து கோவிலுக்கு திரும்பி வந்த பின்னரும் நகைகள் சரி பார்க்கப்பட்டு கருப்பண்ணசாமி முன்பு பட்டியல் வாசிக்கப்பட்டே கள்ளழகர் கோவிலுக்குள் நுழைகிறார். இப்பேர்பட்ட  கருப்பண்ணசாமிக்கு பலர் அவர் உபயோகப்படுத்தும், அரிவாள், ஈட்டி போன்ற ஆயுதங்களை நேர்த்திக்கடனாக செலுத்தி வருகின்றனர்.

அதுபோல, தற்போது பக்தர்க ஒருவர் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமிக்கு இரண்டு அரிவாள்களை காணிக்கயைக செலுத்தி தனத நேர்த்தி கடனை முடித்துள்ளார். இந்த அரிவாள்கள் ஒவ்வொன்றும் 450 கிலோ கிராம் எடையுடன் பதினெட்டறை அடி (18.5 அடி) உயரத்துடன், பார்ப்போரை மிரள வைக்கும் வகையில் செய்யப்பட்டுள்ளது. இந்த அரிவாள், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள பட்டறையில் பிரத்யேகமாக செய்யப்பட்டு, பூஜை புனஸ்காரங்களுடன் கள்ளழகர் கோவில் காவல் தெய்வமான பதினெட்டாம்படி கருப்பண்ணசாமிக்கு  நேர்த்திக்கடனமாக வழங்கப்பட்டு உள்ளது. இந்த அரிவாளை காணும் பக்தர்கள் மெய்சிலிர்த்து வணங்கி செல்கின்றனர்.

கள்ளழகருக்கு காவல் தெய்வமாக விளங்கும் பதினெட்டாம்படி கருப்பசாமி ஆலயம்! மதுரை அழகர் கோயிலில் காவல் தெய்வமாக இருக்கும் கருப்பண்ணசாமி மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக கூறப்படுகிறது . இந்த கருப்புசாமி பலருக்கும் குலதெய்வமாகவும் பலருக்கு இஷ்ட தெய்வமாகவும் இருந்து அருள் புரிந்து வருகிறார் பதினெட்டாம்படி கருப்பசாமி. ஆண்டுதோறும் ஆடி பவுர்ணமி நாளில் மட்டும் கருப்பண்ணசாமி கோவில் கதவுகள் திறக்கப்படும். ஆடி பவுர்ணமியை முன்னிட்டு பதினெட்டாம் படி கருப்பணசாமி கோவில் கதவுகளுக்கு சந்தனம் சாத்தும் நிகழ்ச்சியும் நடைபெறும்.