சென்னை

நீதிமன்றங்களி அம்பேத்கர் படம் அகற்றப்பட மாட்டாது என சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உறுதி அளித்துள்ளது.

சென்னி உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள நீதிமன்றங்களிலும்,  வளாகங்களிலும் மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளுவர் ஆகியோரை தவிர வேறு எந்த தலைவரின் சிலைகளும், உருவப்படங்களும் வைக்கப்படக்கூடாது எனச் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளர் அனைத்து நீதிமன்றங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

அதையொட்டி நீதிமன்றம், நீதிமன்ற வளாகங்களில் உள்ள சட்டமேதை அம்பேத்கரின் சிலைகளையும், உருவப்படங்களையும் நீக்கும் முயற்சிகள் நடந்தது.  பல அரசியல் கட்சி தலைவர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபூர்வாலாவை முதல்வர் ஆலோசனைப்படி சந்தித்துப் பேசினார்.  சந்திப்பில், அம்பேத்கர் படத்தை நீதிமன்றம், மற்றும் அதன் வளாகத்தில் அகற்றக்கூடாது என்ற தமிழக அரசின் நிலைப்பாடு ஏற்கப்பட்டு இருக்கிறது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

”நீதிமன்றங்களில் அண்ணல் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படும் என்ற செய்தி பரவியதை தொடர்ந்து, முதல்வரின் அறிவுறுத்தலின்படி, சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபூர்வாலாவை சந்தித்து இதுகுறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

சட்டத்துறை அமைச்சர் தலைமை நீதிபதியிடம், அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படக்கூடாது என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டினை நேரில் தெரிவித்தார். தமிழக அரசின் நிலைப்பாட்டைக் கேட்டறிந்த தலைமை நீதிபதி, நீதிமன்றங்களில் எந்த தலைவர்களின் புகைப்படத்தையும் அகற்ற உத்தரவிடப்படவில்லை. தற்போது உள்ள நடைமுறையே தொடரும் எனத் தெரிவித்தார்”

என்று அறிவிக்கப்பட்டுள்ளது.