ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிளென் மேக்ஸ்வெல்லின் மனைவி வினி-க்கு இந்திய முறைப்படி வளைகாப்பு நடைபெற்றது.

2022ம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வினி ராமனை கிளென் மேக்ஸ்வெல் திருமணம் செய்துகொண்டார்.

இவர்களின் திருமணம் ஆஸ்திரேலிய முறைப்படி ஒருமுறை மற்றும் இந்திய பாரம்பரிய முறைப்படி ஒருமுறை என விமரிசையாக நடைபெற்றது.

இந்த நிலையில் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் வினி ராமனுக்கு இந்திய பாரம்பரிய முறைப்படி வளைகாப்பு நடைபெற்றுள்ளது இந்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதனையடுத்து ரசிகர்கள் மேக்ஸ்வெல்-வினி ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.