ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் இந்தியாவில் நீண்டநாள் முதல்வர் பதவியை வகிக்கும் இரண்டாவது நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

2000, 2004, 2009, 2014 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தொடர்ச்சியாக ஐந்து முறை முதல்வராக இருப்பவர் நவீன் பட்நாயக்.

மேற்கு வங்க மாநிலத்தில் 23 ஆண்டுகள் 138 நாட்கள் தொடர்ச்சியாக முதல்வராக பதவி வகித்த ஜோதிபாசு-வின் சாதனையை நவீன் பட்நாயக் இன்று சமன் செய்துள்ளார்.

1994 முதல் 2019 வரை சிக்கிம் மாநில முதல்வராக இருந்த பவன் குமார் சாம்லிங் தான் இந்தியாவிலேயே நீண்டகாலம் அதாவது 24 ஆண்டுகள் 166 நாட்கள் தொடர்ச்சியாக முதல்வராக இருந்துள்ளார்.

தற்போது ஜோதிபாசுவின் சாதனையை நவீன் பட்நாயக் சமன் செய்திருப்பதன் மூலம் இந்தியாவின் அதிக நாட்கள் முதல்வராக பதவி வகிக்கும் இரண்டாவது நபராக விளங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]