சென்னை

கஸ்ட் மாதம் 6ஆம் தேதி குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு தமிழகத்துக்கு வர உள்ளார்.

இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வரும் ஆகஸ்ட் மாதம் தமிழகத்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அவர் வரும் ஆகஸ்ட் 6-ந்தேதி தமிழகத்திற்கு வருகை தர உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

அன்றைய தினம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

அதைத் தொடர்ந்து சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.