டில்லி

த்திய அரசு இனி சர்வதேச விமானப் பயணிகளுக்கு கொரோனா சோதனை இல்லை என அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் வெகுவாக அதிகரித்த காலகட்டத்தில் இந்தியாவுக்கு வரும் சரவதேச விமானப் பயணிகளுக்கு கொரோனா சோதனை கட்டாயம் ஆக்கப்பட்டது.  அதன்படி ஒவ்வொரு விமான நிலையத்திலும் சோதனை முகாம்கள் அமைக்கப்பட்டன.

தற்போது மத்திய அரசு இந்தியாவுக்கு வரும் சர்வதேச விமான பயணிகளுக்கு கொரோனா சோதனை செய்யும் நடைமுறை முடிவுக்கு வந்துள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  கொரோனா பாதிப்பு உலகெங்கும் குறைந்துள்ளதால் இனி இந்த சோதனை இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

அதே வேளையில் பயணிகள் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.