சென்னை: எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு சென்னை திரும்பிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2024ம் ஆண்டு புதிய இந்தியா உருவாகும் என கூறினார்.

பெங்களூரில் நடைபெற்ற இரண்டாவது எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினாா்.  இந்த கூட்டத்தில், எதிர்க்கட்சிகளின் கூட்டத்துக்கு இந்தியா என பெயரிடப்பட்டனர்.  கூட்டம் முடிந்த பின்னா்  அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திருப்பிய முதல்வர் ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில்,  அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, கே.என் நேரு, ஐ.பெரியசாமி, சேகர்பாபு உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனா்.

பின்னர் செய்தியாளா்களை சந்தித்துபோது, இந்தியாவின் ஜனநாயகம், அரசியலமைப்பு சட்டம், மதச்சார்பின்மை, மாநில சுயாட்சி, ஏழை எளிய மக்களுக்கான நலன் மிகப்பெரிய நெருக்கடியில் சிக்கித் தவித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். தொடா்ந்து பேசிய முதலமைச்சர், வரும் நாடாளுமன்ற தேர்தலில். பாஜகவை வீழ்த்தி, வெற்றி பெற இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த எதிர்கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சிகளின் கூட்டணிக்கு I.N.D.I.A. என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தொிவித்த முதலமைச்சா் மு.க.ஸ்டாலின், மும்பையில் நடைபெறவுள்ள அடுத்த கூட்டத்தில், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலைப் பொறுத்தவரை புதிய இந்தியா உருவாகும் எனவும் அப்போது அவர் நம்பிக்கை தொிவித்துள்ளார்.

அமலாக்கத்துறை சோதனை என்பது எதிர்பார்த்த ஒன்றுதான் என குறிப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அனைத்தையும் சட்டரீதியாக எதிர்கொள்ள உள்ளதாகவும் குறிப்பிட்டாா்.