ராணிப்பேட்டை
ராணிப்பேட்டையில் விளையாட்டு மைதானத்தில் காவலர் குடியிருப்பு கட்டுவதை விடுதலை சிறுத்தை கட்சியினர் எதிர்த்து மனு அளித்துள்ளனர்.

பல ஆண்டுகளாக ராணிப்பேட்டை மாவட்டம் காரையில் உள்ள 7.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட விளையாட்டு மைதானத்தை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இங்கு இளைஞர்கள் உடல் திறனை மேம்படுத்த சில உடற்பயிற்சிகளும், கிரிக்கெட், கைப்பந்து, கால்பந்து, இறகுப்பந்து போன்றவற்றை விளையாடி வந்தனர்.
காவலர்களுக்கு குடியிருப்பு அமைக்க இந்த விளையாட்டு மைதானத்திம் தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதை எதிர்க்கும் வகையில் பொதுமக்கள் சார்பில் 200-க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாவட்ட செயலாளர் குண்டா என்ற சார்லஸ் தலைமையில் இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக வந்து கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர்.
பிறகு அவர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேசிடம் கோரிக்கை மனு அளித்தனர் இதைத் தொடர்ந்து மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு கிரண் ஸ்ருதியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். ராணிப்பேட்டை நகராட்சி துணை தலைவர் சீ.ம.ரமேஷ்கர்ணா, தமிழ், சசி, ராஜா, நரேஷ், ராஜசேகர் உள்பட பலர் அப்போது உடன் இருந்தனர்.
[youtube-feed feed=1]