முன்னணி தமிழ் தயாரிப்பாளர் எஸ்.ஏ. ராஜ்கண்ணு இன்று காலமானார்.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான பாரதிராஜா-வின் முதல் படமான ’16 வயதினிலே’ திரைப்படத்தை தயாரித்தவர் எஸ்.ஏ. ராஜ்கண்ணு.

16 வயதினிலே மட்டும் இல்லாமல் கிழக்கே போகும் ரயில், கன்னி பருவத்திலே, மகாநதி என ஏராளமான படங்களை தயாரித்துள்ள அவரின் மறைவு திரையுலகில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
"16 வயதினிலே"திரைப்படத்தின்
வாயிலாக என்னை இயக்குனராக
அறிமுகம் செய்து, என் வாழ்வில்
ஒளி விளக்கு ஏற்றிச் சென்ற
என் முதலாளி
திரு. S.A.ராஜ்கண்ணு அவர்களின்
மறைவு,பேரதிர்ச்சியும், வேதனையும், அளிக்கிறது.
அவரின் மறைவு எனக்கும்
என் குடும்பத்தினருக்கும் பேரிழப்பாகும். ஆழ்ந்த இரங்கல். pic.twitter.com/OGMSc2DnQv— Bharathiraja (@offBharathiraja) July 11, 2023
“16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் என்னை இயக்குனராக அறிமுகம் செய்து, என் வாழ்வில் ஒளிவிளக்கு ஏற்றிச்சென்ற என் முதலாளி திரு S.A.ராஜ்கண்ணு அவர்களின் மறைவு, பேரதிர்ச்சியும் வேதனையையும் அளிக்கிறது. அவரின் மறைவு எனக்கும் என் குடும்பத்துக்கும் பேரிழப்பாகும்” என்று பாரதிராஜா தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
[youtube-feed feed=1]